குடிநீர் குழாய் அமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க ஆணை

புதிதாக கட்டப்பட்டுவரும் 9 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பணிகளையும், பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளையும்,பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளையும், குடிநீர் குழாய் இணைப்பு பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு தெற்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மாநகராட்சியில் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளையும், மற்றும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளையும் துரிதமாகவும், தரமானதாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

புதிதாக கட்டப்பட்டுவரும் 9 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பணிகளையும், பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர் பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் திட்டப்பணிகளையும், சாலைகள் செப்பனிடும் பணிகளையும் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில்; உடனுடக்குடன் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்கள். மேலும் மாநகரப் பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் முரளி, செயற்பொறியாளர் ஞானவேல், குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் சம்பத், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டார்கள்.