தூய்மைப் பணியாளர்களுக்கு ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பில் நிவாரணப் பொருட்கள்

கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பாக 50 தூய்மை பணியார்களுக்கு 5 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை ஹோட்டலின் சார்பில் மேலாளர் சந்தீப், ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் பந்தய சாலை காவல் துறையினர் வழங்கினர். நிவாரணப் பொருட்களை வாங்க வந்த தூய்மைப் பணியார்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி சென்றனர். ஊரடங்கு காலத்தில் அரசு பல உதவிகளை செய்தாலும் தனியார் நிறுவனங்களும் இது போன்ற உதவிகளை செய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.