போலீஸாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்

கோவை மாநகர தெற்கு போலீஸாருக்கு, கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினார்.

மாநகர பகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினார். அதன் ஒரு பகுதியாக மாநகர தெற்கு போலீஸாருக்கு கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் மாஸ்க், கண்ணாடி மற்றும் ஊட்டச்சத்து பானம், உணவுப் பொருட்களை ஆணையர் வழங்கினார்.

அப்போது காவலர்கள் மத்தியில் பேசிய ஆணையர் சுமித்சரண், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் மிகவும் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும். தினமும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகும் என கூறினார். மேலும் பணியில் உள்ள போது கண்டிப்பாக முகக்கவசம், கண்ணாடி அணிய வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகர சட்டம் ஒழுக்கு, கிரைம், போக்குவரத்து மற்றும் இருப்பிட துணை ஆணையர்கள், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட போலீஸாருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.