வியாசர் அரிமா சங்கத்தின் பேருந்து நிறுத்தம்

கோவை வியாஸர் அரிமா சங்கம் சார்பில் கள்ளிப்பாளையம் ஊராட்சியில்  அண்ணாநகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திறந்து வைத்தார்.

கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு அதிகரித்து வருகின்ற காரணத்தினால் எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கள்ளிப்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் கிராமத்தில் உள்ள  பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கோவை வியாசர் அரிமா சங்கம் சார்பில் பேருந்து நிறுத்தம் அமைத்து தரப்பட்டது.

இதன் துவக்க விழாவில் அரிமா மாவட்ட ஆளுநர் கர்ண பூபதி தலைமையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திறந்து வைத்து இதனை அமைத்துக் கொடுத்த அரிமா சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்வில் GST ஒருங்கிணைப்பாளர் மின்னல் சீனிவாசன்,  செயலாளர் செவ்வேள்,  பொருளாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதேபோல் சேரன்மாநகர் பகுதியில் 3 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவை சிம்டெக் இண்டஸ்ட்ரீஸ் சார்பாக அமைத்து தரப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வியாசர் பசுமை இயக்கத்தின் நிறுவனத்தலைவர் அரிமா கோபால்சாமி, அரவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அபிநயா ஆறுகுட்டி,  சர்க்கார் சாமகுளம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கவிதா சண்முகசுந்தரம், கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செந்தில் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.