ஜூன் மாதமும் இலவச அத்தியாவசியப் பொருட்கள்

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு,1 லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை விலையின்றி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள் இலவமசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததை அடுத்து வருகின்ற வெள்ளி முதல் ஞாயிறு வரை வீடுகளுக்கே நேரில் வந்த அதற்கான டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளாம் என்றும், சென்று ஜூன் 1ஆம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.