விற்பனைக்கு தயாராகும் ‘ரெபோஸின்’ நடமாடும் எரிபொருள் வாகனம்

இந்தியாவின் வளர்ச்சி தற்பொழுது ஆன்லைன் மயமாக மாறிவருகிறது. உணவிலிருந்து மளிகை பொருட்கள் வரை தற்பொழுது மதுபானம் கூட ஆன்லைன் மயமாகி வருகிறது. இதன் ஒரு முக்கிய வளர்ச்சியாக எரிபொருள் ஆன்லைன் மூலம் பெற்றுகொள்ளலாம் என்ற நிலை வந்தள்ளது.

இதனை புனேவை மையமாக கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக இயங்கிவரும் ‘ரெபோஸ்’ எனும் எரிசக்தி-விநியோக நிறுவனம் இவர்களது செயலியின் மூலம் டீசல் முன்பதிவு செய்தால் அவர்களது இடத்திற்கே சென்று வழங்கும் முறையில் நிறுவனத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது.

இவர்களின் முதன்மை நோக்கம் ஜென்ரேட்டர்கள் மூலம் இயங்கும் மருத்துவமனைகள், விவசாய மக்களின் தண்ணீர் தேவைக்காக இயங்கும் ஜென்ரேட்டர்கள் மற்றும் உணவு விடுதிகளில் பயன்படுத்தும் ஜென்ரேட்டர்களுக்கு தேவைப்படும் டீசல் இவர்களது செயலின் மூலம் பதிவு செய்தால் அவர்கள் நேரில் அவர்களது ஸ்மார்ட் நடமாடும் பெட்ரோல் பங்க் வாகனத்தின் மூலம் கொண்டு வந்து கொடுத்துவிடுவார்கள்.

தலைமை நிர்வாக அதிகாரி(CEO) சேதன் வாலுஞ்ச் மற்றும் ரெபோஸ் எனர்ஜியின் தலைமை மூலோபாய அதிகாரி(CSO) அதிதி போசலே வாலுஞ்ச் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் இதுவரை சுமார் 320 மொபைல் எரிபொருள் பவுசர்கள் எனும் டீசல் கொண்டு செல்லும் வாகனத்தின் மூலம் இதனை செய்துவருகின்றனர்.

‘தற்போது இந்தியாவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும், அதற்கான இடங்கள் கிடைப்பது இல்லை மற்றும் இதற்காக ஏற்படும் பெரும் செலவுகள் காரணமாகவும் இது சாத்தியமில்லை. ஆனால், இந்தியாவில் 55,000 க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் தான் இருக்கிறது’ என்று ரெபோஸ் எனர்ஜியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சேதன் வாலுஞ்ச் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனால் ரெபோஸ் நிறுவனம் டீசல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இதுபோன்ற 3000க்கும் மேற்பட்ட வாகனங்களை உருவாக்கி விற்பனை செய்யப்போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியவில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மழையினால் பாதிக்கப்பட்டு மின்சார தடைபட்ட பொழுது, புனேவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளான, சஹ்யாத்ரி மருத்துவமனை,  ஜஹாங்கிர் மருத்துவமனை, ஆதித்யா-பிர்லா மருத்துவமனை மற்றும் தேசிய தகவல் மையம் உள்ளிட்டவற்றிக்கு ரெபோஸ் நிறுவனம் வழங்கியது, தற்பொழுதும் வழங்கிவருகிறது.

இதுமட்டுமல்லாமல், ரெபோஸ் ‘லென்ட் எ ஹேண்ட்’  எனும் திட்டத்தின் மூலம், இவர்களது நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் 1 மாத சம்பளத்தை ஏழைகளுக்கு உதவ நன்கொடையாக வழங்கினர். பொதுமக்களிடமும் நிதி பெற்றும் உதவி வருகின்றனர்.

ரெபோஸ் செயலி மூலம் ஒரு வாடிக்கையாளர்கள் டீசலுக்கு ஆர்டர் செய்யும்போது, நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட ஸ்மார்ட் நடமாடும் பெட்ரோல் பங்க் வீடுதேடி வந்து வழங்கும் வாகனத்தை தற்பொழுது தயாரித்து வழங்குவதன் மூலம் இதன் பயன் அதிக மக்களுக்கு கிடைப்பது மட்டுமல்லாமல் இந்திய அளவில் ஒரு பெரிய வளர்ச்சியை உருவாக்கும்.

இந்த நிறுவனத்திற்கு ரட்டன் டாட்டா பொருளாதார ரீதியில் உதவிவருகிறார் என்பது மேலும் ஒரு நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.