விண்வெளி வீராங்கனை சாலிரைட்

அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் விண்வெளி வீராங்கனை சாலி ரைட் 1951ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார்.

இவர் 1978ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்தார். மேலும், 1983ஆம் ஆண்டு விண்வெளியில் கால்பதித்த முதல் அமெரிக்க பெண் என்ற வரலாற்றை படைத்தார். இவர் மொத்தம் 343 மணிநேரம் விண்வெளியில் இருந்துள்ளார்.

ஆர்பிட்டர் சேலஞ்சரில் இரண்டு முறை பறந்து சென்ற பிறகு, இவர் 1987ஆம் ஆண்டு நாசாவை விட்டுச் சென்றார். பிறகு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாட்டு மையத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

தேசிய வீராங்கனையாக மதிக்கப்படும் இவர் 2012ஆம் ஆண்டு மறைந்தார்.