கோவில் பூசாரி மற்றும் முடி திருத்தும் கலைஞர்களுக்கு ‘மோடி கிட்’

கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பில் சலூன் கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, உப்பு, மஞ்சள் தூள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட ‘மோடி கிட்’ வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

மக்கள் சேவை மையத்தின் தலைவர் மற்றும் தமிழக மாநில பாஜக பொதுச்செயளாலர் வானதி சீனிவாசன் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் P.M.நாகராஜ் ஆகியோர்  கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

இது குறித்து வானதி சீனிவாசன் பேசுகையில், இன்று முடி திருத்தும் கலைஞர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு 200 மோடி கிட் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பையும் 700 ரூபாய் மதிப்பு கொண்டது. இதுமட்டுமல்லாமல் நாளை கிராமப்புற கலைஞர்களுக்கும் வழங்கப்படும் என்றார். மேலும் இந்த பணி ஊரடங்கு காலம் முடியும் வரை நடைபெறும். இதனோடு முகக்கவசமும் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.