கேரளாவில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் இன்று 24 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 8 பேர்  நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கும், கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 3 பேருக்கும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேருக்கும், இடுக்கி, பாலக்காடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.