பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உருவம் பொறித்த சிறப்பு நாணயம்

கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் இன்று வெளியிடப்படுகிறது. அவரது படம் பொறித்த 10 மற்றும் 100 ரூபாய் நாணயங்களும் வெளியிடப்படுகிறது. மத்திய கலாச்சார துறை சார்பில் நடைபெறும் விழாவில் துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு கலந்து கொண்டு நாணயங்கள் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.