வெள்ளலூர் வளர்ச்சி பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளார் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வெள்ளலூரில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து 168.00 கோடி ரூபாய் மதிப்பில், 61.62 ஏக்கரில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர், கோவைப்புதூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மாநகராட்சியுடன் இணைந்து பாதாளசாக்கடை அமைக்கும் பணிகள் மற்றும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெறுவதையும், முத்தண்ணன் குளக்கரையில் திட்டப்பணிகள் நடைபெறுவதையும் மாநகராட்சி ஆணையாளர் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர்கள் குந்தராஜன், உமாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.