கேபிஆர் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

ஒவ்வொரு நாட்டையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பெரும்பாலும் கைகளின் மூலம் ஒருவரை ஒருவர் தொடுவதாலோ அல்லது ஒருவர் தொட்டதை மற்றொருவர் தொடுவதாலும் பரவுகிறது என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஊரடங்கினால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கேபிஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதுவித சிந்தனையுடன் தற்பொழுதைய தேவைக்கு உண்டான ஒரு இயந்திரத்தை சுகாதாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.

சுத்தமாக வைத்துக்கொள்ள கைகளைக் கழுவினாலும், அதற்கு முன் கைகளால்தான் தண்ணீர் குழாயைத் திறக்க வேண்டும். அதன் மூலமும் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதற்கு மாற்றாக கைகளால் தொடாமல் கைகழுவும் இயந்திரத்தை இக்கல்லூரி இயந்திரப் பொறியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

கைகளை வேறு எதற்கும் பயன்படுத்தத் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி நோய் பரவலுக்கு வாய்ப்பாக இருக்கும் தொடுதலைத் தவிர்க்கும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது. “புட் ஆப்ரேட்டட் ஹான்ட் வாசர்” என்று பெயரிடப்பட்ட இந்த இயந்திரத்தில் தண்ணிர் திறக்க ஒரு பகுதியும், ஹான்ட் வாசர் சோப்க்கு ஒரு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தண்ணீரின் பயன்பாட்டு அளவு மிகவும் குறைவாகக் கொண்டு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹான்ட் வாசர் சோப்க்கும் அதேபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்தில் 60லிருந்து 70 பேர் சமூக இடைவெளியுடன் பயன்படுத்தலாம்.

இக்கல்லூரியின் மாணவர்கள் வித்யா சாகர், சரவண பாரதி, விதூர் வர்ஷன், சுரேஷ் பாபு ஆகியோரின் திட்டத்தில் பேராசிரியர் சரவணனின் வழிகாட்டலில் துறைத்தலைவர் குணசேகரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த “புட் ஆப்ரேட்டட் ஹான்ட் வாசர்” இயந்திரம் விற்பனைக்குத் தயராக உள்ளது. மேலும் விவரங்களுக்கு களுக்கு சுரேஷ் பாபு 87789 11232, 94429 01469.