கொலுவை அலங்கரிக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொம்மை.

கொலு பூஜை என்பது தென் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. கொலு என்றால் அழகு என்று பொருள்.கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை மிகப்பிரபலமாக நடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த கொலு பூஜையில் விதவிதமான கொலு பொம்மைகள் அலங்கரிக்கின்றன. கடந்த ஆண்டு இந்தியா பாகுபலி பொம்மைகள் கொலுவையும் அலங்கரித்தது இருந்தன.

அந்த வகையில்  இந்த வருடம் கொலு பூஜையில் அலங்கரிக்கும் பொம்மை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொம்மை.

கொலு பூஜையில் ஜெயலலிதாவின் உருவங்கள் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கொலு பூஜையின் பொருட்டு ஜெயலலிதாவின் நினைவுகளும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.