உலக குடும்ப மருத்துவர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மே 19 ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு – WONCA) 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிவித்தது.

குடும்ப மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பதால், அவர்கள் நோய்வாய்ப்படும் போதும், அவர்களால் முடியாத பட்சத்திலும் வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்ப்பார். எனவே குடும்ப மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பாராட்டும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.