கல்வித் தரத்தை சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்பத் தயார்படுத்த திட்டம்

கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்திக்குறிப்பில், கற்றல் வெளிப்பாடுகள் மீது மாணவர்கள் கவனம் செலுத்தும் வகையில், அனுபவப்பூர்வமான மற்றும் மகிழ்ச்சிகரமான கற்றலை, திறனாய்வு சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் தொடர்புத் திறனோடு வழங்குவதை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இதற்கான பாடத்திட்டங்கள் இந்திய நெறிமுறைகளின் வேர்களோடு,  உலகளாவிய திறன் தேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எனவே, மாணவர்களையும், வருங்கால ஆசிரியர்களையும் சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவக் கட்டத்துக்கு, தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.