ஊரடங்கால் சுத்தமாகிறது, சுற்றுச்சூழல்!

கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைந்துள்ளது. இது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி முழுவதும் காற்று மாசால் மூச்சு விடவே போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த நிலை ஊரடங்கு காரணமாக தணிந்துள்ளது. அதேப்போன்று கங்கை நதி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சுத்தமாகி உள்ளது.

தற்போது நோபாளத்தின் காட்மாண்டு பள்ளத்தாக்கத்திலிருந்து இமயமலை தெளிவாகத் தெரியும் புகைப்படத்தை நேபாளி டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் காட்மாண்டு பள்ளத்தாக்கில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்துள்ளது.