விபத்துக்கு காரணம் நம் அறியாமை தான்

– கே.பி.ராமசாமி, தலைவர், கே.பி.ஆர் நிறுவனங்கள்

சாலைகளிலும், தொழிற் சாலைகளிலும் நடக்கும் விபத்து களுக்கு காரணம் நம் அறியாமை மற்றும் அலட்சியம் தான் என்று கே.பி. ராமசாமி, கூறினார்.

கோவை உற்பத்தித்திறன் குழு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு கோவையில் நடந்தது. இக்கருத்தரங்கிற்க்கு கே.பி. ராமசாமி, தலைவர், கே.பி.ஆர் நிறுவனங்கள், தலைமை வகித்தார். இதில் அவர் பேசியது; நம் அறியாமை மற்றும் அலட்சியத்தால் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதனால் நாம் ஒவ்வொருவரும் பொதுநலத்துடன் செயல்படவேண்டும், சமுகத்திற்கு நம்மால் முடிந்த வரை உதவியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி சி.இ.ஒ டாக்டர் எ.எம்.நடராஜன் வரவேற்றார். தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் கே.அருள் மற்றும் ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் (மனிதவள மேம்பாட்டுத்துறை) டாக்டர் கவிதாசன் கலந்து கொண்டு பாதுகாப்பின் முக்கியத் துவத்தை பற்றி பேசினார். மேலும் இக்கருத்தரங்கில் ‘தொழிலகங்களின் பாதுகாப்பு’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

கருத்தரங்கில் ‘தொழிலகங்களின் பாதுகாப்பு’ என்ற புத்தம் வெளியிடப்பட்டது.
(வலமிருந்து) சுதாகர், துணை செயலாளர், கோவை உற்பத்தித்திறன் குழு, டாக்டர் எ.எம்.நடராஜன், சி.இ.ஒ பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி. சச்சிதானந்தம், முன்னாள் தலைவர், கோவை உற்பத்தித்திறன் குழு, கே.பி. ராமசாமி, தலைவர், கே.பி.ஆர் நிறுவனங்கள், டாக்டர் கவிதாசன், ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் (மனித வள மேம்பாட்டுத்துறை). சித்ரா, முதல்வர் ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி, கே.அருள், கூடுதல் இயக்குநர், தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை.

உலக பொருளாதார சந்தையில் நாம் வெற்றிபெற வேண்டு மானால் நம்முடைய உற்பத்திகளை மிக குறைந்த விலையில் தரத்துடன் வாடிக்கையாளர்களுக்கு விற்க வேண்டும். இதற்கு பல வகையான உற்பத்தித்திறன் உத்திகளை கையாண்டு குறைந்த செலவிலும் குறைந்த நேரத்திலும் உற்பத்தியை பெருக்க வேண்டும். செழிப்பான தொழில்நிறுவனத்தில் முக்கிய மூன்று தூண்களாக பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் தரம் உள்ளது.

பாதுகாப்பான சூழ் நிலையை அடித்தளமாக கொண்டு செயல்பட்டால் தான் உற்பத்தி மற்றும் தரம் எனப்படும் கட்டிடத்தை கட்ட முடியும்.

அண்மையில் ஆய்வுகளில் பாது காப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுவது உற்பத்தியை பன்மடங்கு பெருக்க உதவும் என தெரிய வந்துள்ளது. மேலும் தற்போதைய துரிதமான தொழில் வளர்ச்சியிலும், நவீன தொழில்நுட்பம் கொண்ட சிக்கலான செயல்முறைகளிலும் தொழிலக பாதுகாப்பு என்பது தலையாய தேவையாகும்.

உண்மையில் நாம் பாதுகாப்பு சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கத்தை வெறும் ஒரு பழக்கமாக கொள்ளாமல் அதை ஒரு கலாச்சாரமாக கருதவேண்டும் என்று பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.