பெரியம்மை தடுத்த எட்வர்டு ஜென்னர்

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் 1749 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் பிறந்தார்.

1765 ஆம் ஆண்டு ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர், கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் உள்ளவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார்.
பிறகு இவர் பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
பின்பு கவ் பாக்ஸ் கிருமிகளை மென்மைப்படுத்தி ஊசி மூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை நிரூபித்தார். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி போட்டார்.
இயற்கையையும், மனித குலத்தையும் அளவு கடந்து நேசித்த மற்றும் கோடிக்கணக்கான உயிர்களைக் காத்தவருமான ஜென்னர் 1823 ஆம் ஆண்டு மறைந்தார்.