விடைத்தாள் திருத்தும் பணியில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27 முதல் ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது. இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பற்றி தேர்வுகள் இயக்ககம் அறிவுரை வழங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள முதன்மை மற்றும் துணை மதிப்பீடு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். ஒரு அறையில் ஒரு முதன்மை தேர்வாளர் உட்பட 8 பேர் மட்டுமே இருக்க வேண்டும். அரசு வாகனத்தில் மட்டுமே விடைத்தாள் கட்டுகள் எடுத்துச்செல்ல வேண்டும். திருத்தப்பட்ட விடைத்தாள்களை தினம்தோறும் முதன்மை மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், மதிப்பெண்களை பதிவேற்றும் பணி, முதன்மை மதிப்பீட்டு மையத்தில் தான் நடைபெற வேண்டும். விடைத்தாள் திருத்தும் அறைகள் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகவசம், சோப்பு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 13 வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த நெறிமுறைகள் பின்பற்றப் படுகிறதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தபட்டுள்ளது.