கதிரியக்க முன்னோடி பியரி கியூரி

மனிதகுல மேம்பாட்டுக்கான பல சிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார். பியரி கியூரி 1859 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி பாரிஸில் பிறந்தார். இவர் 21வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பியூசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியைக்  கண்டறிந்தார்.

இவர் காந்த குணங்களைக் கண்டறிவதற்காக முறுக்குத் தராசு ஒன்றை உருவாக்கினார். பிறகு காந்தப் பொருட்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவர் கண்டறிந்த விதிமுறை கியூரி விதி எனப்படுகிறது.

தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். இவர்கள்தான் கதிரியக்கம்  என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர்.

கதிரியக்கத்தைக் கண்டறிந்தமைக்காக 1903 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கெரல், மேரி கியூரியுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி ஆல்பா, பீட்டா, காமா கதிர்களைக் கண்டறிந்தார். கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி அலகு என்று குறிப்பிடப்பட்டது.

நோபல் பரிசுக் குடும்பத்தில் பிறந்த கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடியான பியரி கியூரி 1906 ஆம் ஆண்டு மறைந்தார்.