கேபிஆர் கலை கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கைகள் ஆரம்பம்

கோவை, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் 2020 – 2021 கல்வியாண்டிற்கான சேர்க்கைகள் துவங்கிவிட்டன. சேர்க்கையின் ஒரு பகுதியாக உடற்கல்வி துறையின் சார்பில் விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) அடிப்படையில் சேர்க்கைகள் நடைபெறவுள்ளன.

இதற்கான தேர்வு போட்டிகள் மே 18 அன்று பூப்பந்தாட்டம் (Ball badminton) தடகளப் போட்டி (Athletics) ஆண்கள் & பெண்கள், கபடிப் போட்டி (ஆண்கள்) நடைபெறும். மே 19 அன்று கைப்பந்து (Volleyball), கூடைப்பந்து (Basketball), பூப்பந்து (Badminton) & மேசைப்பந்தாட்டம் (Table Tennis) ஆண்கள் & பெண்கள் போட்டிகள் நடைபெரும். இந்த போட்டிகள் அனைத்தும் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

விளையாட்டுத்துறை வீரர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) தங்கள் கல்வி மற்றும் விளையாட்டு தொடர்பான சான்றிதழ்களோடு வருகை தந்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரரர்கள் மே 20 மற்றும் 21 – ஆம் தேதிகளில், தாங்கள் விரும்பிய துறைகளில் சேர அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு – விக்ரம் 7708182824.