சுத்தானந்த பாரதியார்

கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்ட சுத்தானந்த பாரதி 1897ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன்.

இவர் சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவது மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். சுத்தானந்தம் என பெயரிட்டு சித்தர் ஒருவர் இவருக்கு தீட்சை வழங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் மிகவும் பிரபலமானவை. மேலும், இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இவர் தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றினார். பல சீர்திருத்தப் பணிகளையும் செய்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ராஜராஜன் விருது இவரது பாரத சக்தி நூலுக்குக் கிடைத்தது.

ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்திய இவர் 1990ஆம் ஆண்டு மறைந்தார்.