தலைவலிக்கான தீர்வுகள்

* கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

* சிறிய அளவில் இஞ்சியை எடுத்து அதை சிறுசிறு துண்டுகளாகத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை வடித்து குடிக்க வேண்டும்.

* வெற்றிலைச்சாறு எடுத்து அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூச தலைவலி தீரும்.

* கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

* கிராம்பை சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின்போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

* 2 மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்றுப்போட்டு வந்தால் தலை வலி குறையும்.

* கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களி போல் கிளறி அதை நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.

* முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

* புதினா இலைகளை இடித்துச் சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

* டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்தால் தலைவலி குறையும்.
உருளைக்கிழங்கு சாப்பிட்டும் தலை வலியை சரி செய்யலாம். பொதுவாக ஆல்கஹால் அருந்தினால் சிறுநீர் அடிக்கடி வெளியேறி உடலில் வறட்சி ஏற்பட்டு, உடலுக்கு அவசிய சத்தான பொட்டாசியம் வெளியேறிவிடும். இத்தகைய பொட்டாசியம் உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. எனவே தலைவலியின்போது, உருளைக்கிழங்கைத் தோலோடு சாப்பிட்டால், வாழைப்பழத்தைவிட அதிகமான பொட்டாசியத்தைப் பெறலாம். மாத்திரைகளைவிட, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களான தர்பூசணியை சாப்பிடலாம்.

மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை உண்டாலும், தலைவலியைக் குறைக்கலாம். கார்போஹைட்ரேட் உடலில் குறைவாக இருந்தாலும் தலைவலி உண்டாகும். எனவே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும். அதற்கு கோதுமை பிரட், பழங்கள் சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள செரோட்டின் உற்பத்தி அதிகமாகி, மனநிலையும் நன்கு இருக்கும். ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள், பாதாம், வாழைப்பழம், அவகேடோ சாப்பிட வேண்டும்.
தலைவலியின்போது கார உணவுகளை சாப்பிட்டால், தலை வலியானது சீக்கிரம் போய்விடும். வலியின்போது கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். வைட்டமின் ஈ அதிகமுள்ள எள் சாப்பிட்டால், உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதோடு, கடுமையான தலைவலியும் போய்விடும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.
பசலைக் கீரை உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைத்து, தலைவலியை போக்கும். எனவே தலை வலிப்பதுபோல் இருந்தால், அந்த நேரம் சாலட் செய்து, அதில் லெட்யூஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக பசலைக் கீரையைப் பயன்படுத்தலாம்.
தலைவலி என்பது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல. தொடர்ந்து தலைவலி இருக்கும்வேளையில் அல்லது மைக்ரேன் வராமல் தடுக்க உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.