பக்தர்கள் இல்லாத மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உலகமே முடங்கிய நிலையில் எண்ணற்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சித்திரை திருவிழாவின் மிக முக்கிய அம்சமான உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவிலின் முக்கிய நபர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்நிகழ்வு ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் (மே 4) இந்து அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கான இணையதளத்திலும், ஃபேஸ்புக் நேரலையாகவும் பக்தர்களுக்காக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் படி, மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு காலை 8.30 மணி முதல் காலை 10.15 வரை நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக இன்று தான் பக்தர்கள் இல்லாத மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு நடைப்பெற்றது.