மெய்நிகர் உதவியாளர் விஐசியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது வோடஃபோன் இந்தியா

கோவை, தொழில் துறையில் முதலாவதாக, புரட்சிகரமான செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவையான விஐசியை அறிமுகப்படுத்தியுள்ளது வோடஃபோன் இந்தியா. இது வாடிக்கையாளர்களுக்கான மெய்நிகர் உதவியாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். தற்போது இது இணையதளங்களிலும், எனது வோடஃபோன், எனது ஐடியா செயலிகளிலும், மிகப் புகழ்பெற்ற தகவல் செயலிகளுள் ஒன்றான வாட்ஸ்அப்பிலும் கிடைக்கிறது.

வோடஃபோன் இந்தியாவுக்காக, மிக முன்னோக்கிய தொழில்நுட்பத்துடன் ரகசிய நிலையில் இயங்கும் தொடக்க நிறுவனமான ஒரிசெர்வ் இதனை வடிவமைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறே அவர்களின் சந்தேகங்களுக்கான பதில்களைப் பெறவும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும் இந்த முயற்சி மூலமாக, வோடஃபோன் இந்தியா செயல்பாட்டை மேலும் எளிதாக்கியுள்ளது. ரசீது கட்டணங்கள், ரீசார்ஜ்கள், மதிப்பு கூட்டப்பட்ட சேவை, திட்ட செயல்பாடு, புதிய இணைப்பு, டேட்டா பேலன்ஸ், ரசீது வேண்டுகோள்கள் உள்ளிட்ட வோடஃபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களின் சேவைத் தேவைகளை விஐசி உடனடியாக நிறைவேற்றுகிறது.

இது பற்றி வோடஃபோன் இந்தியாவின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் விஷாந்த் வோரா கூறுகையில், வோடஃபோன் இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களை இணைப்பதிலும் டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்துவதால் விரிவாக்கப்பட்ட அனுபவத்தைப் பெறச் செய்வதிலும் உறுதியாக இருக்கிறோம். டிஜிட்டலில் முதன்முறையாக எனும் எங்களது  அணுகுமுறையில், நாங்கள் தொடர்ந்து புதுமையான மற்றும் தீவிரமாகச் செயலாற்றக்கூடிய தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை அளிக்கிறோம். இவை அனைத்தும் குறைவான விலையில் வசதியானதாகவும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகத் தீர்வளிப்பதாகவும் உள்ளன. எங்களது தொழில்நுட்ப கூட்டாளரான ஒரிசெர்வ், செயற்கை நுண்ணறிவில் இயங்கும் கூர்மைமிக்க வாடிக்கையாளர் சேவை தளமான விஐசியை உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்துவரும் தற்போதைய சூழலில், தொலைதொடர்புத் துறையில் முதலாவதான இம்முயற்சி மிகப்பொருத்தமானதாகவும் அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

எளிதாகப் புரிந்துகொள்ள, பயன்படுத்த எளிதான, பாதுகாப்பானதாக இருக்கும் விஐசி, நாளைய தொழில்நுட்பத்தின் பெரும்பாலான நன்மைகளை இன்றே பெறும் வகையில் வாடிக்கையாளர்களை வோடஃபோன் இந்தியாவுடன் உரையாட வைக்கிறது. வீடுகளே எல்லையாகக் கொண்டு மக்கள் இருந்துவரும் நிலையில், புள்ளிவிவரங்களையும் தாண்டி மெய்நிகர் / டிஜிட்டல் தளத்துக்கு அவர்களது வாழ்க்கை மாறியிருக்கிறது. காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, வோடஃபோன் ஐடியாவின் விஐசி மெய்நிகர் உதவியாளரை 24×7 நேரமும் நாட முடியும். இது தடையில்லா சேவையை அளிப்பதுடன், வோடஃபோன் ஐடியா என இரு தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் ஒரேமாதிரியான அனுபவத்தை தருகிறது.

எஸ்எம்எஸ் வழியாகப் பெறும் இணைப்பு மூலமாக, வோடஃபோன் ஐடியா பயனாளர்கள் விஐசியை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் உரையாடலைத் தொடங்கலாம். மாறாக, கீழே தரப்பட்ட இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது கீழேயுள்ள எண்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமாகவோ, வாடிக்கையாளர்கள் இச்சேவையைப் பெறலாம்.