ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மே 17 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீடிக்கப்படுகிறது.

மே 3 ஆம் தேதியுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொரோனா நோய்த் தொற்று பாதிப்பின் அளவைப் பொருத்து, நாடு முழுவதும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று பட்டியல் வெளியிட்டது. இதனைப் பொருத்து தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டிருந்ததது.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அதன்படி, சிவப்பு மண்டலங்களில் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அங்கு ஏற்கனவே இருந்த தடை தொடரும்.

ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆரஞ்சு மண்டலங்களில் மாவட்டங்களுக்கு இடையேயான குறிப்பிட்ட போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

விமானம், ரயில், மெட்ரோ மற்றும் சாலை வழியாக மாநிலங்களுக்கு இடையேயான குறிப்பிட்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி மற்றும் பயிற்சி / பயிற்சி நிறுவனங்களின் இயங்கலாம்.

 

 

 

Source : தினமணி