கொரோனா சமயத்தில் இது போன்று செய்யாதீர்கள்

– நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்திற்கு மே 1ம் தேதி அவரது 49வது பிறந்தநாள். பொதுவாகவே அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சமூகவலைதளங்கள் வந்த பின்பு, அதிலும் அன்றைக்கு அஜித் சம்பந்தப்பட்ட படங்கள் அஜித் சமந்தம்பட்ட விஷயங்களே டிரெண்டிங்கில் இருக்கும். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் நடிகர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்க பொதுவான டிபி ஒன்றை ரசிகர்கள் உருவாக்கி டிரெண்ட் செய்கின்றனர்.

இந்தாண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுவான டிபி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை 14 சினிமா பிரபலங்கள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா சமயத்தில் இது போன்று செய்யாதீர்கள் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளார்.