23வது தேசிய பிளம்பிங் துறை மாநாடு

இந்திய பிளம்பிங் அமைப்பு  23வது தேசிய பிளம்பிங் துறை மாநாட்டை சென்னையில் செப்டம்பர் 22 முதல் நடத்த உள்ளது.  ‘அடுக்கு மாடி வீடுகளுக்கான குழாய்கள் வடிமைப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து  இந்த இரண்டு நாள் மாநாட்டில் விவாதிக்கப்படும் .

சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பிளம்பிங்  இந்திய பிளம்பிங் அமைப்பின் தலைவர் குர்மித் சிங்  அரோரா சென்னை பிரிவு தலைவர் அப்பாஸ் லெக்ரி, எல்.அண்ட் டி நிறுவனத்தை சேர்ந்த கே ஸ்ரீகுமார் ஆகியோர் அறிவித்தனர்.

சென்னையில் 23வது தேசிய பிளம்பிங் துறை மாநாடு செப்டம்பர் 22 முதல் நடைபெற உள்ளது. இந்திய பிளம்பிங் அமைப்பு நடத்தும் இந்த மாநாட்டில் கட்டிட கலை வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அடுக்கு மாடி கட்டிட தொழில் துறையினர், ஆலோசகர்கள், குழாய்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

சென்னையில் கட்டிட தொழில் வர்த்தகம் வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. உற்பத்தி தொழில், ஏற்றுமதி வர்த்தகம், கல்வி நிறுவன உள்கட்டமைப்பு போன்றவற்றின் வளர்ச்சியினால் ரியல் எஸ்டேட் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது  இத்தகைய காரணங்களினால் சென்னையில் 23வது தேசிய பிளம்பிங் மாநாடு  நடத்தப்படுகிறது.

இந்த தேசிய மாநாட்டையொட்டி நடைபெற உள்ள கண்காட்சியில் பிளம்பிங் தொழில் துறை சர்வதேச மற்றும் தேசிய முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. கண்காட்சியில் பதிய கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்கள், வடிவமைப்புகள், புதுமையான சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.