பள்ளிக்கு செல்லாமல் கவிஞரான பிரபாவதி…

இறைவன் மனிதர்களை படைக்கும் போது பல நிறை, குறைகளை அவர்களிடத்தில் வைத்து படைக்கிறான். இருப்பினும், நம்மிடம் உள்ள நிறைகளை அதிகளவில் ஏற்றுக் கொண்டு, குறைகளை சரி செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும். குறைகளை சரிசெய்து கொள்பவன் சிறந்த மனிதனாக மாறுகிறான். வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். நிறைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு குறைகளை சரி செய்து கொள்ளாத மனிதன் வாழ்க்கையில் தோல்வியைத் தழுவுகிறான்.

அதேபோல், ஒரு மனிதனின் அழியா சொத்து என்றால் அது அவனுக்கு கிடைத்த சிறந்த கல்வியே. “கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல். ஏனென்றால், கல்லாமைதான் தீவினையின் மூலவேர்”. நம் முன்னோர், ஒரு பெண் கல்வி பயின்றால் அவள் சார்ந்த குடும்பமே கல்வி பயின்றது போல என்று கூறுவர். அவ்வாறு பெண் கல்வி பெருமிதமாய் போற்றப்படுகிறது.

இந்நிலையில் வாழ்க்கையின் குறைகளைக் களைந்து கல்வியைப் போராடிப் பெற்ற ஒருவரைக் குறித்து காண்போம். இவர் தனது இரண்டு வயதில் போலியோ தாக்குதலால் பாதிக்கப்பட்டதால் இரண்டு கால்களையும் பறிகொடுத்து பள்ளிக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிட்டது.இருப்பினும், இவர் தனது சாதிக்க வேண்டும் என்ற எண்ணங்கள், கனவுகள், எதிர்பார்ப்புகளால், தன் வீட்டையே பள்ளிக்கூடமாக நினைத்து, உடன்பிறப்புகளின் பாடபுத்தகங்களையே ஆசிரியராக மாற்றிக்கொண்டார்.

ஒரு மனிதனின் சிறந்த நண்பன் என்பது நல்ல புத்தகங்களே. ஆனால் இவருக்கோ மாதா, பிதா, குரு எனஅனைத்துமே புத்தகங்கள்தான்.ஆ ர்வத்தை மட்டுமேமூலதனமாக வைத்து தனது திறமையைத்திறம்பட செயலாற்றி இன்று கவிஞராக உருவெடுத்திருக்கும் பிரபாவதி, நம்முடன் பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக…

பள்ளி செல்லாமல் கற்றுக்கொண்ட கல்வியைப்பற்றி சொல்லுங்கள்?

போலியோவால் இரண்டு கால்களை இழந்த நான், வீட்டில் என் சகோதரிகள் படிக்கும் பொழுது, அவர்களுடன் சேர்ந்து நானும் கல்விகற்கஆரம்பித்தேன். அவர்கள் எழுதும் வீட்டுப் பாடங்களை நானும் எழுதுவேன். எனக்குத் தெரிந்த விஷயங்கள், தெரியாத வைகளை அவர்களிடம் கேட்டு கற்றுக் கொண்டேன். கல்வியின் மேல் ஆர்வம் அதிகரிக்கவே, பலபுத்தகங்களை வாங்கி படிக்கத் தொடங்கினேன். எழுதவும் ஆரம்பித்தேன். இவ்வாறு தான் எனது வீடு, பள்ளிக்கூடம் ஆனது.

எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுது வந்தது?

சிறு வயதில் அன்னையை இழந்தேன். என் தந்தை மறுமணம் செய்து கொண்டார். சித்தியின் குணாதிசயங்கள் அனைவரும் அறிந்ததே. நான் வேதனையில் வாடும் போதெல்லாம் எனக்கு ஆறுதல் கூறியது புத்தகங்களும், கவிதைகளும் தான். தனிமை யில் இருக்கும் பொழுது நிறைய கவிதைகள் மூலமாக என் வேதனை களை எழுத்தில் இறக்கி வைப்பேன்.

உங்கள் எழுத்துத் திறமையைத் தூண்டிய எழுத்தாளர்கள்?

நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக, கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன் புத்தகங்களை நான் விரும்பியதுண்டு. அவை தான் எனக்கு எழுதவும் ஊக்கம் கொடுத்தவை.

உங்களுடைய படைப்புகள்?

நிறையகவிதைகள் எழுதியிரு க்கிறேன். என்னுடைய பல கவிதைகள் வார இதழ்களில் வெளியாகும்போது அளவில்லா சந்தோசம் அடைந்திருக்கிறேன். சமீபத்தில் “குறுநகைபூக்கள்” என்ற புத்தகத்தை எழுதியிருக் கிறேன். இதுவே எனது முதல் படைப்பு. அதற்கு வரவேற்பும், நல்ல அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.

கணவரின் பங்களிப்பு?

(சிறு புன்னகையோடு) எனது கணவர் பாஸ்கர், என்னுடைய வெற்றிக்கு முழு முதற்காரணம்.எங்கள் காதல் மலர்ந்ததே கவிதையில் தான். அவர்தான், திருமணத்திற்கு முன்பிருந்து இன்று வரைஎனக்கு முழு ஒத்துழைப்பும், ஊக்கு விப்பும் கொடுப்பவர்.எங்கள் கருத்துக்களை கடிதங் கள் மூலமே பரிமாறிக் கொள் கிறோம். அதைப் படிக்கும் போது ஆனந்தம் கூடுகிறது. எங்களுக்கு பிரகாந்த் என்ற மகன் இருக்கிறார்.

இன்றைய கால கட்டத்தில் எழுத்தாளர் களுக்கும், அவர்கள் படைக்கும் புத்தகங்களுக்கும் வரவேற்பு கிடைக்கிறதா?

கிடைக்கிறது. ஆனால் மிகவும் குறைவு. காரணம், அனைத்தும் டிஜிட்டல் மையமாக மாறி வருவதால் புத்தகங்களை படிப்பதற்கும், அதைப்பற்றி பேசக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக, நம் மக்களுக்கு புத்தகங்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை என்பதே வேதனைக்குரிய விஷயமாகும்.

இன்றைய இளைஞர்களுக்கு எழுத்தாளராக உங்களுடைய அறிவுரை?

தேடல் வேண்டும். வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அதற்கான தேடல் வேண்டும். புத்தகங்களைப் படியு ங்கள். புத்தகங்களைப் போல் சிறந்த நண்பன் இல்லை. அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை சரியான தருணத்தில், முறையாக வெளிப் படுத்தினால் வெற்றி உங்கள் வசம்.