நதிகளை மீட்போம்

வறண்டு போய் கொண்டிருக்கும் நம் தேசத்து நதிகள் பற்றி சத்குரு கொடுக்கும் குறிப்பு

எதிர்கால சந்ததியினருக்கு நதிகள் இன்றியமையாதவை. அவர்களின் வாழ்வாதரத்திக்கு நாம் விட்டுச்செல்லும் மிக முக்கியமான ஒன்று நம் நதிகள், நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றதை போல நாமும் நம் நதிகளை நமது சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்கிடுவோம். நமது ஆறுகளை புத்துணர்ச்சியூட்டச் செய்வதர்க்கு ஒரு எளியவழி என்னவென்றால் நதியின் இரு கரைகளையும் குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்க்கு மரங்களின் நிழல்களால் மூடச்செய்வதே.

அரசாங்கநிலத்தில் காட்டு மரங்களையும் விவசாயநிலத்தில் பழ மரங்களையும் நடவேண்டும். இது மண்ணை ஈரப்பதமாக்கி நமது  ஆறுகள் வருடம் முழுவதும் பாய்ந்தோடவழிவகை செய்யும். இது வெள்ளப்பெருக்கு, வறட்சிமற்றும் மண்ணரிப்பை தடுக்கும் இதனால் விவசாயிகளின் இலாபம் பெருகும். நான் விழிப்புணர்வு பயணம் செல்கிறேன் எனக்கு தெரியாது என்னால் இந்த ஒரு மாதம் தூங்க முடியுமா என்று.

அதனால் எனக்கு உங்களின் ஆதரவு தேவை, நான் என்ன சொல்கிறேனோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாக நீங்கள் வேலை செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு வேண்டுகோள் இன்று இரவு உணவு உண்பதர்க்கு முன்பு இருபது நொடிகள் மௌனமாக இருந்து இந்த உணவை தந்த விவசாயியை குறித்து நினைத்து பாருங்கள் நமக்கு இத்தனை ஆண்டுகள் ஊட்டச்சத்தளித்த விவசாயி இன்று தற்கொலை செய்கிறான். இந்த அவலம் நீங்க வேண்டும், அதற்க்கு நீங்களும் கைகொடுக்க வேண்டும் அதற்க்குத்தான் இந்த மிஸ்டுகால் திட்டம்.

80009 80009 என்ற எண்ணிற்க்கு மிஸ்டு கால் கொடுத்து யார் வேண்டுமானலும் இந்ததிட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளமுடியும். 30 கோடி மிஸ்டு கால்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மிஸ்டு காலும் ஒரு வாக்காக சேகரிக்கப்பட்டு அது குடிமக்களின் வாக்காக அரசிடம் சமர்பிக்கப்படும்.

இந்தியாவின் எதிர்காலத்தை கருத் தில் கொண்டு  நாம் அனைவரும் இதில் பங்கெடுப்போம், நம் நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்!இந்திய நதிகளின் அவல நிலையை கருத்தில் கொண்டு சத்குரு அவர்கள் நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் என்ற இயக்கத்தை தொடங்கி நாடு முழுவது தானே வாகனம் ஓட்டி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறார்.

தென்கோடியான கன்னியாகுமரியில் தொடங்கி இமயமலைவரை செல்லும் அவர் இறுதியாக டில்லியில் பிரதமரைசந்தித்து “நதிகளை காப்போம்” இயக்கத்தின் திட்டவரையரையான நம் நதிகளின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் அகலத்திற்கு மரங்கள் நடுவதை பரிந்துரைக்கிறார்.இதன் துவக்கவிழா கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி கோவை வ.உ.சி மைதானத்தில் நடந்தேரியது. சத்குரு தலைமையில் நடந்த இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பஞ்சாப் மாநில கவர்னர் வி.பி சிங்பட்னோர், மத்தியஅமைச்சர் திரு.ஹர்ஷ்வர்தன், மாநில அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜ், தமிழ்நாடு விவசாயப்பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர். கே.ராமசாமி, மகேந்திரா குழுமத்தின் மார்கெட்டிங் பிரிவு தலைவர் திரு. விஜய்நக்கர்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலிராஜ் ஆகியோர் பங்கேற்று நதிகள் காப்பதன் அவசியம் குறித்த தங்களின் கருத்துக்களை பகிர்ந்தனர்.

  • சத்குரு