கவுண்டம்பாளையம் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா அச்சுறுத்தலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர் அறிவுறுத்தலின்படி கவுண்டம்பாளையம் நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, கோவனூர் பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் காலனிகளில் வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சரவணம்பட்டி பகுதி கழகப் பொறுப்பாளர் பையாக்கவுண்டர் வீடு வீடாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து 600 குடும்பங்களுக்கு வழங்கினார்.

இதில் ஊராட்சி கழகச் செயலாளர் சஞ்சீவ்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் சந்துருஜெகவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், அரசூர் பூபதி, வட்டக்கழக ஊராட்சி துணைச் செயலாளர் பூபதிராஜ், குணசேகரன், ரஞ்சித், சேகர், முருகேஷ், மகேந்திரன், வெள்ளிங்கிரி, சிவக்குமார், கோவனூர் குப்புசாமி, செல்வகுமார், பிரகல்குமார், பன்னீர், சாந்தகுமார் ஆகியோருடன் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.
அதேபோல் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 400 குடும்பங்களுக்கு வழங்கினார். அதில் பேரூர் கழகச் செயலாளர் வீரபத்திரன்,முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் பத்மாலயா சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து பலர் கலந்து கொண்டனர்.