கேஐடி கல்லூரி ‘கொரோனா’வுக்கு தற்காலிக அர்ப்பணிப்பு

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி (கேஐடி) வளாகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக அர்ப்பணிப்பு செய்யத் தயாராக இருப்பதாக கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவை மாநகர எல்லையில் அமைந்துள்ள எங்களது கல்லூரியில் 250 விடுதி அறைகள், 800 கட்டில்கள், 15,000 சதுர அடி கலையரங்கம், 15,000 சதுர அடி சமையற்கூடம், 100 வகுப்பறைகள் உள்ளன. இவை அனைத்தையும் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா சிகிச்சைக்கான வார்டாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி தெரிவித்து ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நாங்கள் எடுத்துள்ள இம்முடிவை அரசு ஏற்றுக்கொண்டு ஆவண செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.