பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியது

கோவிட் –19 தொற்றுநோய்க்கு எதிராக போராட, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.25 கோடியை பாரத பிரதமர் நிவாரண நிதிக்காக அளித்துள்ளது.

டிவிஎஸ் கிரெடிட் சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் கிளைடான் லிமிடெட் மற்றும் இதன் குழும நிறுவனங்களுடன் இணைந்து இநு்த நிதியை அ்ளித்துள்ளது. இது குறித்து டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ சமுதாயத்தில் நிலையான வளமான நிலையை உறுதிப்படுத்த டிவிஎஸ் குழும நிறுவனங்கள் தொடர்ந்து உதவி வருகின்றன. ஸ்ரீனிவாசன் சேவை அறக்கட்டளை மற்றும் நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்வு நிதி பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளுடன் இந்த நிதியை அளிக்கின்றன.

இது குறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர் வேணு சீனிவாசன் கூறுகையில், ‘‘அதிவேகமாக பரவி வரும் தொற்றுநோயான கோவிட்–19 , எப்போதும் இல்லாத அளவில் நவீன வரல்லாற்றில் மனித குலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு எதிரான போராட்டத்தில், வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.  இதற்காக அரசு எடுத்து வரும் பல்வேறு கடும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் அரசுக்கு ஒத்துழைப்பதோடு, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக செயல்பட்டு நாட்டை  காக்க வேண்டும், ’’ என்றார்.