கோவையில் ‘மோடி கிச்சன்’

கோவையில் இன்று முதல் தினமும் உணவில்லாத மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க ‘மோடி கிச்சன்’ துவங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இதுவரை நாடுமுழுவதும் தனது பணியை மேற்கொண்டு வரும் ‘மோடி கிச்சன்’ தற்பொழுது கோவையில் துவக்கப்பட்டுள்ளது. இதனை துவக்கி வைத்த வானதி சீனிவாசன் பேசுகையில், இந்த பணியில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பான முறையிலும், சமூக இடைவெளியை பின்பற்றியும் இதனை மேற்கோள்ள வேண்டும் என்றும், மேலும் ஒவ்வொரு பகுதியிலும் கட்சி நிர்வாகிகள் மூலம் அந்தந்த இடத்திற்கேற்ப இந்த ‘மோடி கிச்சன்’ ஆரம்பிக்கப்படும் என்றார். இந்த ‘மோடி கிச்சன்’ மூலம் அத்தியாவசியப் பணிகள் மே‌ற்கொ‌ள்ளு‌ம் தூய்மை பணியாளர்கள் மற்றும் உணவில்லாத மக்கள் ஆகியோருக்கு உணவு தயாரித்தும், மளிகை பொருட்கள் ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தன்னார்வல தொண்டு நிறுவங்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.