பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்குதற்கான ஆணையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (28.03.2020) கொரோனா வைரஸ் தொற்று சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கான நிவாரணப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர்  பொள்ளாச்சி.வி.ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் (கோவை வடக்கு) பி.ஆர்.ஜி.அருண்குமார், (மேட்டுப்பாளையம்) ஓ.கே.சின்னராஜ், (கவுண்டம்பாளையம்) வி.சி.ஆறுக்குட்டி, (கோவை தெற்கு) அம்மன் கே.அர்ச்சுனன், (கிணத்துக்கடவு) எட்டிமடை எ.சண்முகம், (வால்பாறை) கஸ்தூரிவாசு, (சூலூர்) வி.பி.கந்தசாமி, ஆகிய அ.இ.அ.தி.மு.க-வைச் சேர்ந்த 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மொத்தமாக ரூ.5கோடி வழங்குவதற்கான ஆணையினை  நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியிடம் வழங்கினார்.

மேலும், மாநகர் முழுவதிலும் பாணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 2000 முழு பாதுகாப்பு கவசங்கள் ரூ.20 லட்சம் மதிப்பிலும், 7000 முகக்கவசங்கள் ரூ.70,000 மதிப்பிலும் 5000 ரப்பர் கையுறை ரூ.1,50,000  மதிப்பிலும், கிருமிநாசினி 100 லிட்டர் ரூ.9000  மதிப்பிலும், Hnad Sanitizer  1000 பாட்டில்கள் ரூ.50,000 மதிப்பிலும் என மொத்தம் ரூ.22.79 லட்சம் மதிப்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.