உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்கும் சத்குரு ஆசிரமம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் உணவிள்ளாதவர்களுக்கு உணவு தயாரித்தும் வழங்கும் கோவையை சேர்ந்த சத்குரு ஆஸ்ரமம்.

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடுமுழுவதும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலருக்கும் காலை, மதியம் மற்றும் இரவு என தன்னார்வ பொதுநல அமைப்புகள் உணவு தயார் செய்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் சுமார் 1000 பேருக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சத்குரு ஸேவாசரமம். இதில் ஆசிரமத்திலுள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் முக கவசம் அணிந்து கொண்டு தேவைக்கேற்ப உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதுடன் உணவுகளை பொட்டலங்களாக்கி வாகனம் மூலம் உணவின்றி இருப்பவர்களுக்கு ஆசிரமத்திலும், நேரடியாகவும் உணவு வழங்கி வருகின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு தேவைக்கேற்ப உணவு சமைக்க தேவையான காய்கறி, எண்ணெய், வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை வழங்க விருப்பம் உள்ளவர்கள் ஆசிரமத்திலும் அல்லது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் ஆசிரமத்தினர் தெரிவித்தனர்.