வோடஃபோன் ஐடியா 4ஜி ப்ளஸ் நெட்வொர்க் தங்குதடையில்லாமல் கிடைக்கும்

கோவை, இந்தியா முழுவதும் பரவலாக வோடஃபோன் ஐடியா தொலைதொடர்பு நிறுவனம் 1.1 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களைச் சென்றடைந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சூழலில், வீட்டிலிருந்தவாறே பணியாற்றுவது மற்றும் அன்புக்குரியவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதற்கான முக்கியச் சேவையாக தொலைத் தொடர்பு இணைப்பு இருந்து வருகிறது. பல மில்லியன் வாடிக்கையாளர்கள்  வோடஃபோன் ஐடியாவின்  வலுவான 4ஜி ப்ளஸ் நெட்வொர்க்கை தங்குதடையில்லாமல் பெற உதவும் வகையில், கடந்த சில வாரங்களாகவே எங்களது என்ஜினியர்கள் சோர்வின்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

தொலைத்தொடர்பு  சேவைகள் மிகவும் அத்தியாவசியமான சேவை என்பதால்  எங்களது நெட்வொர்க்குகளை  தங்குதடையில்லாமல் தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், நோய்த்தொற்றுக்கு எதிரான விரிவான, முழுமையான பதிலீட்டுத் திட்டத்தில் முடிந்த அளவுக்கு ஆபத்தைக் குறைக்கும் நெறிமுறைகளை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் செயல்பாடுகளைத் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து செயல்பாட்டு அம்சங்களிலும் எங்களது வர்த்தகத் தொடர்ச்சி திட்டங்கள் முழுமையாக, நிபுணத்துவத்துடன் மதிப்பிடப்படுகின்றன. எங்களுடைய முதன்மையான சிறப்பான நெட்வொர்க் ஆபரேஷன் சென்டர் ஆனது புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களில் அமைந்துள்ளன. இவை 22 வட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கே மையப்படுத்தப்பட்ட கண்காணிக்கும் மையமாக விளங்குவதோடு, நெட்வொர்க் கட்டுப்பாடு மற்றும் வர்த்தகத் தொடர்ச்சியை எங்கும் பயனற்று போகாத வகையில் உறுதி செய்கிறது.  எங்களது நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பான நெட்வொர்க் ஆபரேஷன் சென்டர் மூலமாக தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு, வர்த்தகத் தொடர்ச்சி முழுமையாக உறுதி செய்யப்படுகிறது.

இதற்காகவே, அலுவலகத்தில் ஒரு சிறப்பறை தயார் செய்யப்பட்டு, அங்கு குழுவின் முக்கியமான உறுப்பினர்கள் கான்பரன்ஸ் கால் மற்றும் வீடியோ கான்பரன்சிங் மூலமாகப் பங்கேற்கின்றனர். செயல்பாடு, நிர்வாகம், சிறந்த நெட்வொர்க் ஆபரேஷன் சென்டர் மற்றும் கூட்டு நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த குழு உறுப்பினர்கள், தொடர்ச்சியாகக் களத்தில் இருப்பவர்களுடன் தொடர்புகொண்டு செயல்பாடுகள் மற்றும் அவற்றின் தொடர்ச்சி குறித்த தகவல்களை உறுதிப்படுத்துகின்றனர்.

முழு ஊரடங்கு காலகட்டத்தின்போது தொலைதொடர்பு பயன்பாட்டு முறைகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம். குரல் அழைப்புகள் மற்றும் தகவல் சேவைகளுக்கான அதிகரித்துவரும் தேவைகளைக் கையாள்வதில் பெரும் நம்பிக்கையுடன் செயலாற்றி வருகிறோம்.

எங்களது 12,000-க்கும் மேற்பட்ட பல்வகை உள்ளீட்டு வெளியீட்டு அமைப்பு, இது வரையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனம்ஸ பல்வேறு துறைகளில்  தொடர்ந்து  அதிகரித்து வரும் தொலைதொடர்பு பயன்பாட்டு பிரச்சனைகளைக் சிறப்பாக கையாள உதவுகிறது. எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ, அந்த இடங்களில் நெட்வொர்க் கிடைக்கும் வகையில் தேவைக்கேற்ப கௌ சைட்கள் பயன்படுத்துவது உட்பட பல்வேறு வழிகளில் திறன்களை மேம்படுத்தி வருகிறோம். மத்திய தொலைதொடர்புத் துறையைத் தொடர்புகொண்டு எங்களது அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு சம்பந்தமாகக் கிடப்பில் இருக்கும் விண்ணப்பங்களைச் சரி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். அலைக்கற்றை வரிசையை தாராளமயமாக்குவது தொடர்பான வேண்டுகோளை மத்திய தொலைதொடர்புத் துறை விரைவாகச் செயல்படுத்தி, எங்களது அலைவரிசை தொடர்பான நெட்வொர்க்குகளின் உள்ளிணைப்புகளை  ஒழுங்குபடுத்துமென்று நம்புகிறோம்.

இந்த கடினமான சூழலில் தொலைதொடர்புச் சேவைகளின் முக்கியத்துவம் குறித்து அரசு நன்கு  உணர்ந்திருக்கிறது. தொலைதொடர்புச் செயல்பாடுகள் சீராக இருக்கும் வகையில் தேவையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தைப் பொறுத்தவரை, பணியாளர்களின் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை தரப்படும். முக்கியமான சேவைகள் மட்டுமே இயங்க வேண்டுமென்ற அரசின் உத்தரவுப்படி, எங்களது வாடிக்கையாளர்கள் 24×7 தடைகளற்ற சேவைகளைப் பெறும் வகையில் குறைவான வசதிகளுடன் மிகக்குறைவான பணியாளர்களுடன் செயலாற்றி வருகிறோம். மீதமுள்ள பெரும்பான்மையான குழு உறுப்பினர்கள் வீட்டில் இருந்தவாறே பணியாற்றுகின்றனர்.

எங்களது தகவல் மையங்களில் தொழில்நுட்பப் பணியாளர்கள் தங்குவதற்குத் தற்காலிகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெருக்கடியான இடங்களில் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்கவும், சில இடங்களுக்குச் செல்ல வாகன வசதி பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமூகத்தில் இருந்து விலகியிருக்க வேண்டுமென்ற நெறிமுறையைப் பின்பற்றி, எங்களது ஊழியர்கள் களத்தில் கவனமுடன் செயலாற்றுகின்றனர்.

இதர உதாரணங்கள்:
• தினமும் களத்தில் இருக்கும், களத்தில் இல்லாத ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் இருந்து விலகியிருத்தல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன
• சோதனைக் குழுக்கள், எப்ஆர்டி மற்றும் ரோந்து செல்வோர்க்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் சானிடைஸர்கள் வழங்கப்படுகின்றன
• தினமும் இருப்பு குறிக்கப்படுகிறது
• கண்காணிப்புக் குழு 24×7 மொபைல் / மின்னஞ்சல் / வாட்ஸ்அப் / வீடியோ கான்பரன்சிங்கில் தொடர்பில் உள்ளது
• எங்களது வாகனங்களில் அவசரகால தொலைபேசி சேவை எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன
• எங்களது பீல்டு என்ஜினியர் ஒவ்வொருவருக்கும் மத்திய தொலைதொடர்புத் துறை கடிதம், சுயவிவர அட்டை மற்றும் பணியாளர் அட்டையை அளிக்கப்பட்டுள்ளன