நமது வம்சத்திற்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்- நடிகர் வடிவேலு

உலகில் என்ன நடந்தாலும் அதை வைத்து ஒரு வைகை புயல் வடிவேலுவின் காமெடி மீம்ஸ் வழியாக வலம் வரும். எதிலும் இவர் இல்லமால் இல்லை. அதே போல் இந்த கொரோனாவின் தாக்கத்திலும் வடிவேலு தப்பவில்லை. இதிலும் இவரது காமெடி மீம்ஸ்களாக கொரோனாவை போல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த கொரோனாக்காக அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறி யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், நமது வருங்கால சந்ததியினருக்காக, வாரிசுகளுக்காக வெளியே வராமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று கை எடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவினை பதிவேற்றியுள்ளார்.