தன்னார்வலர்கள் நேரடியாக உணவு வழங்க தடை !

தன்னார்வலர்கள், தொண்டு அமைப்புகள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் volunteers registration செய்துக் கொள்ளலாம் எனவும், அரிசி, பருப்பு, சமையல் எண்னெய், சானிட்டரி நாப்கின், சாம்பார், ரசப்பொடி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுக்க முன்வரலாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல் வீடு இல்லாதவர்களுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினி, சோப்பு திரவம், லைசால் போன்ற கிருமி நாசினிகள் உள்ளிட்ட பொருட்களை கீழ்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம் அல்லது அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் கொண்டு வந்து கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை வழங்க விரும்புவோர், கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களுக்கு 044-25384530 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து சமைத்த உணவுகளை நேரடியாக சென்று கொடுப்பதன் மூலம் தொற்று பரவக்கூடும் என்பதால் அதற்கு தடைவிதிக்கப்படுவதாகவும், அது சட்டத்திற்கு புறம்பானதாக கருத்தப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.