நாட்டை காக்க நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும்

– துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்

கொரோனா பரவலை தடுக்க நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
இவரது ட்வீட்டர் பக்கத்தில் “நாம் ஒரு தமிழராய் தமிழ் மண்ணையும், இந்தியராய் தேசத்தையும் காக்க, முதலில் நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும்.
தனிமை.. அதுவே எதிர்காலத்திற்கான இனிமை என்பதை உணர்ந்து அரசிற்கு ஒத்துழைப்பு தருவோம்.
சமூக விலகலை கடைபிடிப்போம்! கொரோனா பரவலை தடுப்போம்!!”
என்று குறிப்பிட்டுள்ளார்