மருந்து தெளிப்பான் இயந்திரம் மூலமாக சுத்தம் செய்த ஊராட்சி தலைவர்

கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊர்ப்பகுதிகளில் மருந்து தெளிப்பான் இயந்திரம் மூலமாக சுத்தம் செய்த ஊராட்சி தலைவர்.

தமிழக அரசு கொரோனா வைரஸை பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தி வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  தீத்திபாளையம் ஊராட்சியில் எழுநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்றம் சார்பாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை வாகன ஒலி பெருக்கி மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் ஆகியவை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு 144 தடையுத்தரவை அறிவித்ததை  பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பிரச்சாரத்தை ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, செயல் அலுவலர் கவிதகலா மற்றும் உறுப்பினர்கள்  செய்தனர். தொடர்ந்து ஊராட்சி தலைவர் கந்தசாமி தாமே முன்வந்து அந்த ஊர்  பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மருந்து தெளிப்பான் இயந்திரம் மூலம் கிருமி நாசினி செய்தார். மேலும் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வீட்டை சுத்தம் செய்யும் சோப்பு நீரை வழங்கி சுகாதாரமாக இருக்க ஊராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து ஊராட்சி தலைவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக மேற்கொண்ட கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்த செய்த விழிப்புணர்வு பிரச்சாரத்தால் தற்போது கிராம மக்களே முன் வந்து அவரவர் வீடுகள் மற்றும் கடைகளில் கைகளை சுத்தபடுத்த நீர் மற்றும் சோப்புகள் வைத்து உள்ளதாகவும். அதனால் தீத்திபாளையம் ஊராட்சியை பொறுத்தமட்டில் ஊர் முழுவதும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மகேஸ்வரி, துணை தலைவர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் மாணிக்கராஜ், ஜெகன் உட்பட பலர் உடனிருந்தனர்.