எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு

கோவை கண்ணம் பாளையத்தில் உள்ள கே.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரியில், உன்னத் பாரத் அபியான் மற்றும் டாக்டர் வித்யா இன்குபேசன் சென்டர் சார்பாக காடாம்பாடி மற்றும் நடுபாளையம் கிராம மக்களுக்கு “கம்யூனிட்டி சர்வீஸ் லேணிங் ஆன் எல்இடி லேம்ப் அசெம்பிள்” கற்பிக்கப்பட்டது.

முதற்கட்டமாக சுமார் 300 பல்புகள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு அதனை எவ்வாறு பொருத்துவது என்று சொல்லிக் கொடுக்கப்பட்டது. எல்இடி பல்புகள் உபயோகப்படுத்துவதால் மின்சாரத்தை எவ்வாறு சிக்கன படுத்தலாம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விளக்கம் அளித்தனர். குண்டு பல்புகள் மற்றும் டியூப் லைட்டுக்கு மாற்றாக சிஎஃப்எல் வந்துவிட்டது இதனால் மின்சார நுகர்வு மிகவும் குறைவானதாகும் அதிக வெளிச்சம் தரக்கூடியதும் என்று கல்லூரி பேராசிரியர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

மேலும் கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில் இன்றைய காலத்தில் எல் இ டி வகை பல்புகள் மிக மிக குறைந்த மின் நுகர்வோர் அதிக ஒளியையும் தருவதால் அதிகமான அளவில் பயன்பாட்டுக்கு வருகிறது என்றும் அருளுவார் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தை விட 15-வார்டு எல்இடி பல்பு தருவதால் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்கலாம் என்ற வழிமுறைகளை பற்றியும் விளக்கமாக எடுத்து கூறினார்கள்.

சமுதாயத்திற்கு நாம் அனைவரும் எரிசக்தி சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புதுப்பிக்கத் தக்க எரிசக்திகளான சூரியசக்தி, சிஎப்எல் , எல்ஈடி விளக்குகளையும், உயிரி எரிசக்திகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் கரிய மிலவாயுவை கட்டுப்படுத்தி சுற்றுச் சூழல்களை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.

நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிவரும் நம் நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு, கிடைக்கக் கூடிய எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்தவும், சேமிக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள். டாக்டர் வித்யா இன்குபேசன் சென்டர் மூலம் இளம் பொறியாளர்கள் புதிய ஆராய்ச்சிப்படைப்புகளை உருவாக்குவதற்கும் மற்றும் வடிவமைப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.