கோவையில் நாளை முதல் ஓம்னி பேருந்துகள் இயக்கபடாது

தமிழக முதல்வர் அறிவித்துள்ள 144 தடை உத்தரவினை முன்னிட்டு நாளை முதல் அனைத்து ஓம்னி பேருந்துகள் இயக்கப்படாது என கோவை மாவட்ட ஓம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் 144 தடை உத்தரவு வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் இருக்கும் என சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான பால், காய்கற்கள், மருந்துபொருட்கள் தடையின்றி கிடைக்கும் எனவும் தெரிவித்தார். இந்த 144 தடை உத்தரவால் தனியார் பேருந்துகள், ஒம்னி பேருந்துகள், ஆட்டோ, டாக்சி போன்றவை இயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஒம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பேசுகையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள 144 தடை உத்தரவின் படி நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை தனியார் ஒம்னி பேருந்துகள் இயங்காது என தெரிவித்தார். கோவையிலுருந்து சென்னை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாகை, திருச்சி, தஞ்சை உள்ளட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டகளுக்கும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் என சுமார் 200க்கும் மேற்பட்ட ஒம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் இந்த தடை உத்தரவால் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்ளுக்கு சென்ற ஒம்னி பேருந்துகள் அப்பகுதியிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவுத்தார். இதனால் ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலைக்கு பேருந்து உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

இதே நிலை நீடிக்குமானால் பேருந்து உரிமையாளர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் ஜி.எஸ்.டி வரிகள் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்தவர் மத்திய மாநில அரசுகள் பேருந்துகள் மீதான கடன் தொகை மற்றும் ஜி.எஸ்.டி வரி உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.