பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

மகளிர் தின விழாவை முன்னிட்டு டாக்டர்.என்.ஜி.பி. பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கை கல்லூரி செயலாளர் டாக்டர்.தவமணி பழனிச்சாமி தலைமை ஏற்று துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர்.பொற்குமரன் முன்னிலை வகித்தார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைம் பற்றி கோவை மாநகர மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சம்பங்கி சிறப்புரை ஆற்றினார். மாணவிகளின் பாதுகாப்புக்கு காவலன் எஸ்ஓஎஸ் செயலியை மாணவிகளின் அலைபேசியில் தரவிறக்கம் செய்தனர். கோவை மாநகர்,  மாவட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் உஷாகுமாரி, பேராசிரியர்கள் சுதா, முத்துபிரியா, காயத்ரி தேவி ஆகியோர் உள்ளனர்.