கே.பி.ஆர் கலை கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா

கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த சிறப்புவிருந்தினர்களையும் சான்றோர்களையும் மேலாண்மையியல் துறை இணைப்போராசிரியர் ஹேமலதா வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். 2019 – 2020 கல்வியாண்டின் அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து கல்லூரி ஆண்டு அறிக்கையை கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வாசித்தார். நிகழ்விற்குத் தலைமையுரை வழங்கிய கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி, வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ளவேண்டும். வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் நாம் கற்றுக் கொள்ளும் நல்லவைகள் கண்டிப்பாக ஒருநாள் வெற்றியைக் கொடுக்கும் என்று கூறினார். நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கிய கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் செயலர் ஏ.கே. முனுசாமி பேசுகையில், வாழ்க்கையில் வெற்றி என்பது உடனடியாகக் கிடைத்துவிடக்கூடிய ஒன்றல்ல. படிப்படியாகக் கிடைக்கும் வெற்றியே எப்பொழுதும் நிலைத்து நிற்கும். ஆகவே படிப்படியான வெற்றியை அடைய மாணவர்கள் நன்கு முயற்சி செய்யவேண்டும் என்று கூறினார். கேபிஆர் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் என். அருண், முயற்சியும், பயிற்சியும் இருந்தால் முடியாதது எதுவும் இல்லை. மாணவர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தால் வெற்றி நிச்சயம் என்று வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிததார்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட, முன்னாள் பதிவாளர், சிஏஓ & ஆம்ப் தலைமை நாவல் நிறுவனங்கள் ராமசுப்ரமணியன் பேசுகையில், வாழ்வில் உயர சரியாக வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். சிறு வயதிலிருந்தே நம் வாழ்க்கைக்கான திட்டமிடுதலைச் சரியாக அமைத்துக் கொண்டால் கண்டிப்பாக உயர்வான  நிலையை அடையலாம்.  அவ்வாறு மேம்பாடு அடையவில்லையெனில் நாம் சரியாகப் படிக்கவில்லை என்பதை விட, சரியாகக் கற்றுக்கொள்ளவில்லை என்பதே பொருளாகும். மாணவர்கள் தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டும். ஆரோக்ய உடல்நலமும் அமைதியான மனமும் அனைத்தையும் வெற்றியாக்கும் என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கும் கல்விசார் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.