பிளாஸ்டிக்கை உணவாக்கி கொள்ளும் மெழுகுப் புழுக்கள்

பிளாஸ்டிக் என்ற அசுரன் இந்த உலகின் மிக பெரிய சாபம். தற்பொழுது வரை பிளாஸ்டிக் ஹாலிவுட் பட வில்லனை போல் அழிக்க முடியாத ஒருவனாக இருகிறது. இதனை கட்டுப்படுத்த பல தீர்வுகள் வந்துகொண்டே இருக்கிறது. இதில் ஒரு தீர்வாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் பூச்சிகளை பயன்படுத்தலாம் என்று கனடா நாட்டின் பிராண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிராண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேனீ வளர்ப்போருக்கு சவாலாக இருக்கும் மெழுகுப் புழுக்களை ஆராய்ந்த பொழுது இதன் வயிற்றில் இருக்கும் சில கிருமிகள் பிளாஸ்டிக்கை எழுதில் செரித்து, ஆல்ஹாலாக மாற்றித்தரும் திறனை கொண்டிருந்தன.

எனவே, இந்த கிருமிகளை தனியே எடுத்து ஆராய்ந்தனர். ஆனால், புழுக்களின் வயிற்றில் இருக்கும் பொழுது செயல்பட்ட வேகத்தை விட, தனியே இதன் வேகம் குறைவாக இருந்தது. இந்த பூச்சிகள் இதனை செரித்து அல்கஹாலாக மாற்றுகிறது. இதனை ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்தால் இதனை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் இதனை பற்றிய ஆய்வுகள் தொர்ந்துகொண்டிருக்கிறது.

தகவல் : தினமலர்