ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘காவலன் செயலி’ விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் பெண் அதிகார மய்யம் இந்தியாவின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் சொசைட்டி , பயோமெடிக்கல் சோசியல்  அவுட்ரீச்கிளப் ஆகியவை தமிழ் நாடு காவல் துறையுடன் இணைத்து நடத்திய ‘காவலன் செயலி‘ பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெண்கள் 1150 பேர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த சுமார் 750 மாணவியர்கள், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீசை சேர்ந்த 150 பெண்கள் , எமரால்டு நகை தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த 250 பெண்கள் ஒரே நாளில் தங்களது செல்போன்களில் “காவலன் செயலியை ஏற்றம் செய்தனர்.

இவ்விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் என்.ஆர் அலமேலு,  ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ன் மனிதவள மேம்பட்டு துறையின் பயிற்சி நிறுவன அதிகாரி சம்பத், எமரால்டு நகை தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜீவ் எபெனெஸிர் , மற்றும் துணை மேலாளர் மேகலா, துடியலூர் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் , சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன், செந்தில் குமார்  ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் முன்னேற்றம் , சமுதாய முன்னேற்றத்தில் மகளிர் பங்கு , வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

கோவை மாவட்டத்தின் இணையதள குற்ற தடுப்பு பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த் காவலன் செயலி ஏற்றம் மற்றும் அதன் பயன்பாடுகளை பற்றிய விளக்கத்தை எல்.சி.டி மூலம் விளக்கினார். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி மற்றும் உதவிபேராசிரியர்கள் ஜான்சி ராணி, திவ்யலட்சுமி மற்றும் ரம்யா ஆகியோர் செய்திருந்தனர்.