பெண்களின் சக்தி பலப்படுத்த வேண்டும்

ரத்தினம் கல்வி குழுமத்தின் மகளிர் தின கொண்டாட்டத்தில் காயத்ரி நடராஜன்

ரத்தினம் கல்வி குழுமம் சார்பாக சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கல்லூரி வளாகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

ரத்தினம் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சீமாசெந்தில் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சிக்கு 2018 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி காயத்ரி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவின் ஒருபகுதியாக பெண்ணின் பெருமையைப் போற்றும் பாதாகைகளை ஏந்தியபடி பேரணியும், இருசக்கரவாகன பேரணியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பேசுகையில், பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்று கூறினார். மேலும் பெண்களின் சக்தி பலப்படுத்த வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி மாணவியரும், அனைத்து பேராசிரியைகளும்  செய்திருந்தனர்.