இந்தியாவில் பெட்ரோல் விலை குறைந்தது

புதுடில்லி: எட்டு மாதங்களுக்கு பின் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 71 ஆக குறைந்தது.
மேற்காசிய நாடான சவுதி அரேபிய, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அதன் விலையை குறைக்கப்போவதாக 7-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 31 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு வளைகுடா போர் நடந்த போது கச்சா எண்ணெய் விலை பெரிதும் சரிந்தது. அதன்பின் இப்போது தான் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில், எட்டு மாதங்களுக்கு பின் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 71 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது.

இந்தியா, எண்ணெய் தேவைக்காக 84 சதவீத இறக்குமதியை நம்பி உள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியாவின் இறக்குமதி செலவு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Source – Dinamalar