புகை பழக்கத்தை நிறுத்துவது சுலபம் தான்!

நாம் எங்கு சென்றாலும் இந்த ஒரு பொதுவான வசனத்தை நாம் அடிக்கடி பார்க்கிறோம், கேட்கிறோம். அது “பொது இடத்தில் புகை பிடிக்காதீர், புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்”. இந்த வசனம் கேட்காதவர் இருக்கவே முடியாது. இப்படி அனைத்து இடங்களிலும் இதனை கட்சிபடுத்த காரணம், இந்த புகை பழக்கம் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இதனை பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியம் தேவை இல்லை.

80 மற்றும் 90 களில் புகை பிடித்தல் ஒரு தீய பழக்கமாக தான் இருந்தது. ஆனால்,  90 களுக்கு பிறகு இது ஒரு ஸ்டைலாக மாறிவிட்டது. இதற்க்கு ஒரு மிக முக்கிய காரணங்களில் சினிமாவும் ஒன்று. இதில் வரும் கதாநாயகர்கள் கதைப்படி புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதனை திரையிலும் கட்டியுள்ளார்கள், தற்பொழுதும் காட்டுகிறார்கள். இதனை பார்த்தே பல இளைஞர்கள் புகை பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டனர். ஒரு தீய பழக்கத்தை பழகுவது மிகவும் சுலபம். ஆனால், அதனை விடுவது என்பது முற்றிலும் கடினமான ஒன்று.

இந்த புகை பழக்கத்தை விடுவதற்கு தற்பொழுது பல வழிமுறைகள் வந்துவிட்டன. மருத்துவ பயிற்சி முதல் சின்ன மாத்திரை வரை அனைத்தும் வந்துவிட்டன. இருந்தாலும், ஊரெங்கும் புகை மண்டலங்கள் தென்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனை விடுவதற்கு ஒரு வழிமுறை உள்ளது. அந்த மருந்துகளுடன், எப்படி இதனை மனம் ஏற்றுகொண்டதோ அதே போல், அந்த மனம் தான் இதனை வெறுக்க, தவிர்க்க வேண்டும். இது சுலபமான காரியம் அல்ல, இருந்தாலும் இது தான் நிதர்சனமான உண்மை. காரணம் அனைத்தையும் முடிவு செய்வது நம் மனம் தான். அதனை கட்டுபடுத்துவது நம் கையில் தான் அதாவது நாம் நினைத்தால் மட்டுமே முடியும்.

பாதிப்பு என்று தெரிந்தே அதனை பயன்படுத்தினால், அந்த வரம் உங்களுக்கே…